மேலை நாட்டில் ஒரு வணிகர் புதிதாக கடை தொடங்குகிறார் என்றால், முதலில் தனக்கு வேண்டிய காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள் வார். நம் நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் அக்கறை கொள்வது இல்லை. எதற்காக அதற்கு ஒரு பிரிமியம் செலுத்த வேண்டும். நம் கடையில் அசம்பாவிதம் எதுவும் நேராது என்று மனதளவில் முடிவுக்கு வந்து விடுவார்கள்.
அண்மையில் ஒருநாள், எங்கள் நிறுவனத்தின் அருகில் உள்ள வெளுப்பகத்தை (Laundary Shop) அதன் உரிமையாளர் வழக்கம்போல இரவு 10 மணிக்கு மூடி விட்டுச் சென்றார். மணி 11-ஐ தாண்டுவதற்குள் அந்தக் கடை முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
கடை வைத்து நடத்தும் ஒரு வணிகருக்கு ‘ஷாப் கீப் பர்ஸ் பேக்கேஜ் பாலிசி’ எல்லா வகையிலும் பாதுகாப்பு தருகிறது. அதற்காகவே இந்த காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களிடம் வாங்கி வைத்து இருந்த நூற்றுக்கணக்கான புடவைகள் கருகி விட்டன. இதில் பட்டுப் புடவைகளும் அடங்கும். அந்தக் கடைக்காரர் காப்பீட்டுத் திட்டம் எதுவும் எடுக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் கடையைப் புதுப்பிக்கவும் அவருக்கு பெருந்தொகை தேவைப்பட்டது. காப்பீடு செய்யாத தவறை நினைத்து அப்போது வருந்தினார்.
இவர் கடையை போல மளிகைக் கடை, தங்க நகைக் கடை, அழகுப் பொருள் விற்பனை செய்யும் கடை, ஜவுளிக் கடை.. இப்படி எந்தக் கடையும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அது மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தாக இருக்கலாம், கொள்ளையர் கை வரிசையாக இருக்கலாம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றமாக இருக்கலாம்.
கடை வைத்து நடத்தும் ஒரு வணிகருக்கு ‘ஷாப் கீப் பர்ஸ் பேக்கேஜ் பாலிசி’ எல்லா வகையிலும் பாதுகாப்பு தருகிறது. அதற்காகவே இந்த காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளும் எந்தவொரு வணிகரும் தங்கள் கடை அல்லது ஷோரூமில் உள்ள பொருட்களின் விவரத்தை அன்றைய சந்தை விலை மதிப்புபடி குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பாலிசியை புதுப்பிக்கும்போதும் அன்றைய சந்தை மதிப்பைக் கருத்தில் கொண்டு, கடையில் உள்ள பொருட்களின் மதிப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அசம்பாவிதம் நிகழும் போதும், உண்மையான இழப்பீட்டை பெறமுடியும்.
‘இன்சூரன்ஸ் திட்டங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கமே, பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன்தான்” என்ற கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
– திரு.வி.ஆர்.ரவிகுமார்,
கிளை மேலாளர்,
யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்.