6விதை நெல்
புத்தகங்கள் காலத்தின் விதை நெல்’ என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் ஒரு விதை நெல்தான் பல நெல் மணிகளை உற்பத்தி செய்கின்றது. புத்தகங்களில் பொதிந்திருக்கின்ற கருத்துகளும் விதை நெல்லாய்த்தான் பலரை உருவாக்குகின்றன.
5 குறுக்கு வழி
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. தொடர்ந்து செயல்படுவதே முதல் வழிமுறை. அதற்கான முதல்படி நம்மீது நம்பிக்கை. தடைகளைத் தகர்த்திடும் மனத் துணிவு.
4 முயற்சி
நமது நல்ல செயல்களுக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லையே என்று கவலை கொள்ளுதல் தேவையற்றது. நமது முயற்சியை விடாது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். தொடர் முயற்சியோடு இடைவிடாத பயிற்சியும் அவசியமாகும்.
3 பயிற்சியும் ஈடுபாடும்
படித்துவிட்டுத் தொழிலில் இறங்கும் இளைஞர்கள் அனைவருமே தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தொழிலில் இறங்குவார்கள். ஆனால் அனைவரும் வெற்றி அடைய முடிவதில்லை. யார் வெற்றி பெறுகிறார்கள் என்றால் முயற்சியும் பயிற்சியும் இருப்பதோடு தொழில் மீது ஈடுபாடும் கொண்டிருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.
2 நம்பிக்கை
கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
1 பழகிக் கொண்டால்
மன உளைச்சலுக்கு மத்தியில் வாழப் பழகிவிட்டால்தான் வாழ்க்கை சிரமமின்றி, மகிழ்ச்சியாய் நகரும். ரயில் தண்டவாளத்தின் அருகில் வீடு இருக்கிறது. அடிக்கடி ரயில் அதில் பயணித்துக் கொண்டிருக்கிறது. “ஐயோ சத்தம் கேட்கிறதே” எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் வாழ இயலாது. அப்படியே வாழும் வாழ்க்கையும் சுவைக்காது. அந்த ரயில் சத்தத்துக்குப் பழகிக் கொண்டால் வாழ்க்கை இனிதாகும்.
– ‘மனிதத்தேனீ’ ரா.சொக்கலிங்கம்