இன்று நிறைய பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களில் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என கேட்கின்றனர். அவர்களின் சிந்தனைக்காக சில தொழில்களின் பட்டியல் இதோ: அழகுக்கலை பார்லர் மற்றும் பயிற்சி மையம் பெண்கள், ஜிம், கிரச், நர்சரி பள்ளி, நர்சரி (செடிகள்/ கன்றுகள்) விற்பனை, டிடிபி மற்றும் செராக்ஸ், சிறு ரியல் எஸ்டேட் நிறுவனம், டெய்லரிங் / ஜரி ஒர்க் / எம்ப்ராய்டரி, பேன்சி ஸ்டோர், உணவு பதப்படுத்துதல் (குடிநீர், ஜூஸ், ஊறுகாய், அப்பளம், மசாலா பொடிகள்), சிமென்ட் ஹாலோ பிளாக், பெண்களுக்கான டிரைவிங் பயிற்சிப் பள்ளி, ரெடிமேட் துணிகள் தயாரிப்பு / ஜவுளி வியாபாரம், மருத்துவ ஆய்வு மையம், மருத்துக்கடை, மகளிர் ஹாஸ்டல், செல்போன் சர்வீசிங், பர்னிச்சர் தயாரிப்பு / விற்பனை.
இன்சூரன்ஸ் ஏஜென்சி, திருமண தகவல் நிலையம், போட்டோ ஸ்டுடியோ, பழங்கள், காய்கறி விற்பனை நிலையம், பழச்சாறு கடை, வெப் டிசைனிங், சிறு ஓட்டல், பால் பண்ணை, பால் பொருட்கள் தயாரிப்பு, சூப் விற்பனையகம், இட்லி / தோசை மாவு.
உப்பு மொத்த / சில்லறை விற்பனை, இன்டர் நெட் மையம், வாடகை பாத்திர நிலையம், இன் வெட்டர் / யுபிஎஸ் / ஸ்டெபிலைசர் விற்பனை / ரிப்பேரிங் / சர்வீசிங், சிப்ஸ் (வாலை, உருளை) தயாரிப்பு, வீட்டு கட்டுமான பொருள்கள்.
கண் கண்ணாடி கடை, லாண்டரி, வணிக நிறுவனங்களுக்கு ஸ்டேஷனரி சப்ளை, செயற்கை நகை உற்பத்தி, பசை தயாரிப்பு, கண்ணாடி பிரேம், வேலை வாய்ப்பு மையம், சிறு பைனான்ஸ் (நகை அடகு) போன்ற தொழில்கள் பல உள்ளன.
தங்களுக்குப் பொருத்தமான தொழிலைத் தேர்ந்தெடுத்து முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
– எம். ஞானசேகர்