ஓட்டுநர் பயிற்சி தரும் வாழ்விணையர்கள்

வாகனங்களின் பெருக்கம், ஓட்டுநர் களின் தட்டுப்பாடு, ஓட்டுநர்கள் கிடைத் தாலும் கொடுக்க வேண்டிய அதிக ஊதியம் காரணமாக வாகனங்களை வாங்கும் பலரும் தாங்களே வாகனத்தை ஓட்டும் வகையில் ஓட்டுநர பயிற்சி பெறுகிறார்கள். இதனால் பல இடங்களில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகளில் ஒன்று, சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சென்னை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி.

இதனை நடத்தி வருபவர்கள், திரு.எல்லப்பன் மற்றும் அவரு டைய மனைவி திருமதி. கற்பகம். ஓட்டுநர் பயிற்சிக்கு வரும் பெண் களுக்கு திருமதி. கற்பகம் பயிற்சி அளிக்கிறார்.

”1987ஆம் ஆண்டு ஒரு மாருதி 800 கார் மற்றும் ஒரு பஜாஜ் சேட்டக் வாகனத்துடன் இந்த பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி னோம். இன்று நான்கு இரு சக்கர வாகனங்களுடனும், ஆறு கார்களுடனும் பயிற்சி அளித்து வருகி றோம்” என்று கூறும் திரு.எல்லப்பன், தன்னுடைய தொழில் வளர்ச்சி பற்றி மேலும் கூறும்போது,
”இன்றைக்கு கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். சிலர் தங்கள் சொந்த காரை ஓட்டுவதற்காகவும், சிலர் ஓட்டுநர் வேலை வாய்ப்புக்காகவும் பயிற்சி பெற வருகின்றனர். இன்றைக்கு ஓட்டுநர்களுக்கு பெரிய அளவுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. கால் டிரைவர் நிறுவனங்களில் சேரும் ஓட்டுநர்கள் மாதத் துக்கு சுமார் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை சம்பாதிக்க முடிகிறது. எங்களிடம் வேலை வாய்ப்புக்காக ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்க நாங்களும் உதவுகிறோம்.

சொந்தமாக கார் வைத்திருக்கும் பலர் தங்கள் ஓட்டுநர் தேவைக்கு எங்களிடம் சொல்லி வைத்து இருப்பார்கள். உரிய ஆட்கள் அமையும்போது அவர்களிடம் பரிந்துரை செய்து வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இப்படி பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறோம்.

chennai-driving-school-1
திரு.எல்லப்பன்

எங்களிடம் பயிற்சிக்கு வரும் அத்தனை பேருக்கும் சிறப்பாக பயிற்சி அளிக்க வேண்டும். சாலை விதிகளை அறிந்து அவர் கள் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வத்துடன் கற்றுத் தருகிறோம்.

பதினைந்து நாட்களில் வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொடுத்து விடுகிறோம். வாகனங்களை தாங்களாகவே ஓட்டுவதன் மூலமாகவே கற்றுக் கொள்ள முடியும் என்பதால் ஒரு நாளைக்கு ஏழு கிலோ மீட்டர் அளவுக்கு அவர்களை ஓட்டச் சொல்கிறோம்.

வாகனங்களைப் பற்றிய அடிப்படை அறிவையும் புகட்டி விடுகிறோம். அதாவது சக்கரங்களில் எந்த அளவுக்கு காற்று இருக்க வேண்டும், காரை எடுக்கும் முன் என்னென்ன கவனிக்க வேண்டும், எத்தகைய பழுதுகள் ஏற்படும், நம்மால் சரி செய்து கொள்ளக் கூடிய பழுதுகள் எவை, சர்வீஸ் ஆட்களைக் கூப்பிட வேண் டிய பழுதுகள் எவை என்பதைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தி விடுவோம்.

ஓட்டுநர் பயிற்சி வழங்குவதுடன், பழைய கார்களை விற்றுத் தரும் பணியையும் செய்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற பலர் தொடர்ந்து எங்களுடைய தொடர்பில் இருப்ப தால் அவர்களின் கார்களை விற்கவோ, வேறு பயன்படுத்திய கார்களை வாங்கவோ வேண்டி இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

திருமதி. கற்பகம்
திருமதி. கற்பகம்

மேலும் சுற்றுலாவுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதையும் துணைத் தொழிலாக செய்து வருகிறோம். உரிமங் களை புதுப்பித்துத் தருவதையும் செய்து வருகிறோம்.

எங்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் நிர்வாகத்தை என் துணைவியார் திருமதி. கற்பகம் சிறப்பாக கவனித்துக் கொள்வ தோடு, கற்றுக் கொள்ள வரும் பெண்களுக்கு அவரே பயிற்சியும் அளித்து விடுவார். இப்போது எங்களிடம் மாதத்துக்கு ஐம்பது பேர்களுக்குக் குறையாமல் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒருமுறை எங்களிடம் பயிற்சி பெற்றுச் செல்பவர்களின் குடும்பத்தில் வேறு யாராவது ஓட்டுநர் பயிற்சி பெற வேண்டி இருந்தால் அவர்கள் நிச்சயம் எங்களிடம் தான் வருவார்கள்.” என்றார், திரு. எல்லப்பன்.

– இர.தினேஷ்குமார் உதவியுடன் எழிற்கோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here