fbpx
Home பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விசயம் - எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும். விவரம் தெரியாமல் கண்ட கண்ட திட்டங்களிலும் பங்குகளிலும் பணத்தைப் போட்டுவிட்டு அவதிப்படாமல் இருக்க நினைப்பவர்கள் இதை அவசியம் படித்தாக வேண்டும். விதிகள் எளிதானவை எது, எதில் எல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அப்படியொன்றும் கடினமானதல்ல. நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனம் என்ன விதமான...
போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும். ஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகளை வெளியீடு செய்யும்போது டிவிடெண்ட்டுக்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது.
ஒரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி -                             விற்றலை முடித்துவிட வேண்டும். அன்றாடம் பங்குகள் வாங்கி-விற்பவர்கள் இரண்டு வகையினர். ஒருவர் முதலீட்டு நிறுவனம் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒன்றின்...
நிதி, முதலீடு, பங்குச் சந்தை, வங்கித் துறை போன்றவற்றில் எச்என்ஐ என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். யார் இந்த எச்என்ஐ-கள்? எச்என்ஐ என்பதற்கு ஹை நெட் ஒர்த் இண்டிவிஜுவல்ஸ் (High net worth individuals) என்பது        விரிவாகும்.அதாவது இவர்கள் அதிக நிகரப் பெறுமானம் கொண்டவர்கள். இவர்களது சொத்துக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் கொடுத்துத் தீர்க்க வேண்டிய கடன்களின் அளவு குறைவாக இருக்கும். இத்தகையவர்களிடம் அதிக அளவு பணம்...
  இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி எல்லாம் தேவை இல்லை; இந்துத்துவாவும், சங்பரிவாரும் மெய்யறு அரசியலும் மட்டுமே போதுமானவை எனக் கருதுவோர் உண்டு. இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்....
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும் அச்சுறுத்துவதாக உள்ளது (Oxfam International)பொதுவாக நல்ல பொருளாதார முன்னேற்றம் என்பது, பொருள் உற்பத்தி வேகமாக உயர்வது (GDP Growth) என்றும்,...
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? மியூச்சுவல் ஃபண்ட் என்பது பொதுவான நிதி இலக்குகளைப் பகிர்ந்துக் கொள்ளும் முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை அதன் திட்டங்களில் சேர்க்கும் நிறுவனம் மற்றும் இது சாதாரண பங்குகள், கடன் பத்திரங்கள், பணச் சந்தை ஆவணங்கள் போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்யும்.  திட்டம் என்றால் என்ன? பொதுமக்கள் சந்தா செலுத்தி வாங்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது....
இனி அனைத்து பங்குப் பரிமாற்றங்களுக்கும் 2.10.2018 முதல் டிமேட் (Demat) முறையையே பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து வந்ததற்கு பதில் அனைத்து பங்குகளும் டிமேட் வடிவத்திலேயே கையாளப்பட வேண்டும். பங்கு பரிமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, கம்பெனி நிர்வாகத்தின்...