fbpx
Home செய்திகள்

செய்திகள்

பிரியாணி உணவு, மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. மேலும் இது ஒரு குறைந்த முதலீட்டுத் தொழிலாகவும் விளங்குகிறது. இதனால் நிறையப் பேர் தங்களுக்கு ஏற்ற வகையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்கிறார்கள். பெரிய உணவகங்கள் முதல், சாலை ஓரக் கடைகள் வரை பிரியாணி தாராளமாகக் கிடைக்கிறது. சென்னை, பல்லாவரத்தில் பிஸ்மி பிராயாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்துகிறார், திரு. முகமது ஷெரிஃப். அவர் நடத்தும் பிரியாணி கடை...
கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் சம்பளம், வீட்டு வருமானம் என அதிக விவரங்களை ITR எனும் வருமான வரிப் படிவம்1 இல் நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக சம்பளம் வாங்குபவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள படிவம்16 -இல் இவை அனைத்தும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். படிவத்தை எவ்வாறு நிரப்புவது? முதலில் அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் சேர்த்து...
நிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் 'ஏ' பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை 'பி' ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் 'ஏ' பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர். அதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து...
நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் விரைந்தோடி விட்டன. நம்மை நாமே வழி நடத்திக் கொள்கின்றோம். ஆளும் கட்சிகள் மாறி இருக்கின்றன. ஆள்பவர்கள் மாறி உள்ளனர். ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் காண முயன்றோம். இப்பொழுது நிதி ஆலோசனை வழிகாட்டும் குழு அந்த பணியைச் செய்கின்றது. வளர்ந்திருக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல்கின்றோம்.
இந்த ஆண்டின் தொடக்கம் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பவர்களுக்கு கவலை தருவதாகவும், பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைந்து இருந்தது. பிளாஸ்டிக் பொருட்களில் சிலவற்றிற்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்கி விட்டது. அந்த வகையில் பிளாஸ்டிக் தாள், மெல்லிய பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் கப்கள், தண்ணீல் தம்ளர்கள், பிளாஸ்டிக் பை ரகங்கள், பிளாஸ்டிக் அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா...
குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்கள். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன. குறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம்...
நிதி ஆண்டு இறுதியில் நிறுவனங்கள் கணக்குகளை முடித்து இலாப நட்ட கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயார் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு இறுதி இருப்பை அடுத்த நிதியாண்டிற்கான தொடக்க இருப்பாக கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு செல்லும் போது அதிக எண்ணிக்கையிலான கணக் கிருப்புகளைக் கொண்டு செல்லும் போது அந்த தொகைகள் அனைத்தும் சரியான...
நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஸ்கேண்டியேவியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி,, கனடா,...
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும் அச்சுறுத்துவதாக உள்ளது (Oxfam International)பொதுவாக நல்ல பொருளாதார முன்னேற்றம் என்பது, பொருள் உற்பத்தி வேகமாக உயர்வது (GDP Growth) என்றும்,...
பருப்பு உடைப்புத் தொழில் தமிழ்நாட்டிலேயே வட சென்னையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோர் குடும்பங்கள் ஏராளமாக இங்கே இருக்கின்றன. அத்தகைய குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர் திரு. டி. ஞானசேகரன். வர்ஷினி தால் மில் என்ற பெயரில் தனது பருப்பு உடைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பருப்பு உடைப்பதற்குத் தேவையான புதுமையான எந்திரங்கள், பெரிய களம்...