fbpx
Home செய்திகள்

செய்திகள்

தமிழர்கள் இனிப்புக்குப் பயன் படுத்தியது பனை வெல்லம் என்ற கருப்புக்கட்டி. பனையில் இருந்து கிடைக்கும் நார் மற்றும் ஓலைகளைப் பயன்படுத்தி சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே பல்வேறு                               பொருட்களை மக்கள் தயாரித்து வந்தனர். இன்றைக்கு பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இவற்றைத் தயார் செய்யும் மூலப்பொருள்கள் எளிதாகக்...
பொருட்கள் மூலக்கூறு களாலும், மூலக்கூறுகள் அணுக்களினாலும் உருவா னது. எல்லா அணுவிலும் ‘உட்கரு’ என்ற ஒன்று உண்டு. அதில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இடம் பெற்றுள்ளன. ஒத்த மின்சுமையைப் பெற்று இருப்பதால் புரோட்டான்கள் ஒன்றையொன்று விலக்கும் தன்மையைக் கொண்டவை. அதனால், அணுவின் உட்கருவில் நியூட்ரான்கள் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்கள் இடங்கொள்ள இயலாது. நியூட்ரான்கள் உட்கருவில் உள்ள நேர்மின்னேற்றம் பெற்ற புரோட்டான் துகள்களுக்கிடையே நிலவும் விலக்கு விசையைக் குறைப்பதன் மூலம் நிலையான உட்கரு...
ஆவணங்கள்(Certificates) தொலைந்தால், யாரை அணுகுவது..? என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? எவ்வளவு கட்டணம்? தொலைந்த ஆவணங்கள் கிடைக்க கால வரையறை மற்றும் நடைமுறை                                      ஆகியவற்றை அறிய... இன்ஷூரன்ஸ் பாலிசி : பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரிச்சான்று, பட அடையாளச் சான்றின்...
மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப்...
கடலூரில் அமைக்கப்பட்டு வரும், ஆண்டொன்றிற்கு 6 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரசாயனப் பொருள் தொழிற்சாலை நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி தற்போது திவாலாகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனா உரத்தொழிற்சாலை என்ற தனியார் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) இணைந்து தொடங்கப்பட்ட நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையின் கட்டுமானப்பணி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூபாய்...
அண்மையில் தாய்லாந்து அரசு, தமிழ்நாட்டில் இருந்து சில செய்தியாளர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே பாங்காங்கில் உள்ள இம்பேக்ட் எக்சிபிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உலக ஸ்பா மற்றும் நலவாழ்வு மாநாட்டில் (World Spa and Well being Convention) கலந்து கொள்ளச் செய்தது. வளர்தொழில் சார்பில் முனைவர். கிரி ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு சென்று வந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ''இந்த மாநாட்டை...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.1 விழுக்காடாக இருந்ததாக அரசு அறிக்கையில் காண்கிறோம். IMF World Economic outlook (october-2016) அறிக்கை, 2016-17 -ல் மிக வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. சராசரி ஆண்டு வளர்ச்சி 1980-2016 ஆண்டுகளில் 6.3% என்றும், 2010 -ல் மிக உயர்ந்து 10.3% என்றும், மற்றும் மிகத் தாழ்வாக 1991-ல் 1.1.% எனவும் வளர்ச்சி...
தங்க நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறீர்களா? நீங்கள் பல எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் என்ன தேவைக்காகக் கடன் வாங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக          இருங்கள். விவசாயக் கடனா, வணிகத்திற்கானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடனுக்கான தவணைக் காலத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாகவே நகைகளை மீட்டுக் கொள்வது வட்டிச் சலுகை உள்ளிட்ட பல பயன்களைப் பெற...
நான் 150 லட்சத்திற்கும் குறைவாக வணிகம் செய்கிறேன். கலவை வரி திட்டத்தில் (Composition Scheme) கண்டிப்பாக சேர வேண்டுமா?  - ஆர். முருகன், நெய்வேலி தேவை இல்லை. வியாபாரி உள்ளீட்டுவரி வழங்களுக்கு உண்டான வரி செலுத்தும் பட்சத்தில் கலவை வரி திட்டத்தில் இருந்து வெளியேறி இயல்பான முறையில் வரி செலுத்தலாம். நேர்மாறான வரி விதிப்பில் ஏதேனும் மாற்றம் உண்டா? - ரி. குணசேகரன், கணபதி ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(4) -ல் கூறப்பட்ட நேர்மாறான வரி...
உலகத் தமிழர் பொருளாதார மய்யம் சார்பில் தொடர்ந்து உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார், திரு. விஆர்எஸ். சம்பத். வழக்கறிஞரான இவர் சட்டக்கதிர் என்னும் சட்ட விழிப்புணர்வு மாத இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருக்கிறார். இது வரை நான்கு உலகப் பொருளாதார மாநாடுகளை இவர் நடத்தி இருக்கிறார். வரும்  அக்டோபர், 11 முதல் 15 வரை புதுச்சேரியில் நடைபெற இருக்கும் ஐந்தாம் உலகத் தமிழர் பொருளாதார...