Home மேலாண்மை

மேலாண்மை

எந்த ஒரு நிர்வாக கட்டமைப்புக்கும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுவது -Hierarchy. இதனை தமிழில் தமிழறிஞர்கள், படிநிலை அமைப்பு என்பதாக மொழி பெயர்த்துள்ளனர். அதாவது ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கே தலைவர், மேலாண் இயக்குநர், செயல் இயக்குநர், பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் என்றெல்லாம் இருக்கும். இந்த வித நிர்வாக கட்டமைப்பே படிநிலை அமைப்பு என்பது. இங்கே தமக்கு மேல் இருக்கும்...
உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மேலாண்மைச் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இன்று உற்பத்தித் துறையிலும், சந்தையிலும் காணப்படும் பல உத்திகள், உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் வாடிக்கையாளர்களே. அவர்களுக்கு மனநிறைவை அளிப்பதில் எல்லா நாடுகளும் ஒருமுகமாக ஈடுபட்டு இருப்பதால், உருவாகிய இந்த உத்திகள் நமது நிறுவனத்திலும் வரவேண்டுமா என்ற ஐயப்பாடு கொண்டவர்கள். இந்தச் சிந்தனை மாற்றங்களின் தொகுப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதோ சில...
இதற்கு கம்பெனி சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும், மேலும் நிறுவனங்கள் (பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன. இதற்கு பங்குதாரர் நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும், பொறுப்புகளும் சேர்ந்த வணிகத்தை, பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றைத் தயாரிக்க வேணடும். பிரைவேட் லிமிடெட் ஆக விரும்பும் அந்த பங்குதாரர் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 2 கூட்டாளிகளாகவாவது இருக்க வேண்டும். கூட்டு...
நினா பெஞ்சமின் சிங் (Nina Benjamin Singh) குர்பிரீத் சிங் (Gurpreet Singh). நினா தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். குர்பிரீத் மின்கலங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வாகனங்கள் மற்றும் தொழில் சாலைகளுக்குத் தேவைப்படும் மின்கலங்களைத் தயாரிப்பதில் இறங்கினார்கள். தங்களுடைய உற்பத்திப் பொருளை விற்பதற்கு இவர்கள் தேர்வு செய்த முறை, பெயர் வழங்கு...
எம்எஸ்எம்ஈஸ் (MSMEs) என சுருக்கமாக அழைக்கப்படும், மிகச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர்த்தக வரவுகளின் அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு போதுமான கடன் அளிப்பதற்கு, ரிசர்வ் வங்கி, மார்ச் 2014 - ல்  Factoring-Trade Receivables Exchange எனும் அமைப்பை நிறுவி நடைமுறை மூலதன சிக்கலை தீர்வு செய்யலாம் எனும் கருத்தமைவை வெளிட்டது. அதனைத் தொடர்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் Payment & Settlement Systems Act, 2007 (2007...
கேள்வி: எனது தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை நிறுவனத்திற்கு சம்பளம் அளித்தல் மற்றும் சில சேவைகள் செய்கிறேன். இதற்கு ஜிஎஸ்டி உண்டா? பதில்: இவை தொழிலாளர்-தொழிலாளி உறவில் வராது என்றும் இதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும்Advance Ruling வந்து உள்ளது. கேள்வி: அண்மைய வரி சதவீதத்தில் அநேக பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதில் ஏற்கனவே நிர்ணயம் செய்து இருந்த அதிக பட்ச விலையை குறைக்க வேண்டுமா? பதில்: ஆம். இல்லை என்றால் சிஜிஎஸ்டி Section...
பிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துவதும் ஒரு நேர்மறை அணுகுமறை எனலாம். குறைகளை குறைகளை சுட்டிகாட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டவும் குறைகள் இருப்பின் பிறர் ̃ மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டவும், அதனைக் களைய என்ன செய்யலாம் சொல்வதுமே  தலைமைப் பண்பு சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும்  நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள். "அட சரியாக செய்தாய்" என்று ஒரு புன்னகை, ஒரு தலை அசைப்பு, முதுகில் ஒரு செல்லத் தட்டு - இவை நிகழ்த்தும்...
"என்னப்பா இரகசியம், உன் முகம் எப்பவும் மகிழ்ச்சியா மலர்ச்சியா இருக்கு" என்று கேட்பவர்களுக்கு மத்தியில், சிலர் ஒனக்கு பிரச்சனையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கியே" என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டு நாள் திடீரென்று லீவு போட்டு...
எம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு புதிய தொழில் முனைவோருக்கான, ஏற்றுமதியாளர் களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. தொழில் தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகளையும் நடத்துகிறது. மேலும் தொழில்கள் செய்முறை தொடர்பான எண்ணற்ற பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. குறு, சிறு,...
ஒரு காலத்தில் டீக்கடை, துணிக்கடை, கறிக்கடை, காய்கறிக்கடை என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த இங்கிலாந்து நாட்டின் பர்சலாம் நகரின் வணிக வீதிகள் இன்று அந்த பரபரப்பு குறைந்து காணப்படுகின்றன. விக்டோரியா காலத்து வணிகக் கட்டிடங்களை நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுத்த காலம் எல்லாம் இப்போது மலை ஏறிப்போய், அந்த கட்டிடங்கள் பல, ''வாடகைக்கு விடப்படும்'' போர்டுடன் காட்சி அளிக்கின்றன. ட்ராவல் ஏஜென்சி கடைகளும்,...