Home மேலாண்மை

மேலாண்மை

ஒரு மனிதரோடு இயல்பாகவும் இனிமையாகவும் பேசுவதற்கு முதலில் அவர் நமக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள்? அவர் புதியவராகவோ, பிரபலமாகவோ இருந்தாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் நமக்கு பிடிக்காதவராக, நமது கருத்துகளை மறுதளிப்பவராக இல்லாமலாவது இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கான பகுதியே. சிறு குழந்தையாக இருக்கும் போது அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லத் தயங்கிய நாம்தான், பின்னாளில் குடும்ப உறுப்பினர்களோடும் பேசி சிரிக்கத்...
உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மேலாண்மைச் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இன்று உற்பத்தித் துறையிலும், சந்தையிலும் காணப்படும் பல உத்திகள், உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் வாடிக்கையாளர்களே. அவர்களுக்கு மனநிறைவை அளிப்பதில் எல்லா நாடுகளும் ஒருமுகமாக ஈடுபட்டு இருப்பதால், உருவாகிய இந்த உத்திகள் நமது நிறுவனத்திலும் வரவேண்டுமா என்ற ஐயப்பாடு கொண்டவர்கள். இந்தச் சிந்தனை மாற்றங்களின் தொகுப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதோ சில...
எந்த ஒரு நிர்வாக கட்டமைப்புக்கும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுவது -Hierarchy. இதனை தமிழில் தமிழறிஞர்கள், படிநிலை அமைப்பு என்பதாக மொழி பெயர்த்துள்ளனர். அதாவது ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கே தலைவர், மேலாண் இயக்குநர், செயல் இயக்குநர், பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் என்றெல்லாம் இருக்கும். இந்த வித நிர்வாக கட்டமைப்பே படிநிலை அமைப்பு என்பது. இங்கே தமக்கு மேல் இருக்கும்...
டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக திருமதி.ஆரத்தி கிருஷ்ணா அதன் இயக்குநர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் இதுவரை அந்த நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநராகசெயல்பட்டு வந்தார். இவருடைய தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா இணை மேலாண் இயக்குநராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன் துணை மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவர்களின் அக்கா திருமதி. ப்ரீத்தி கிருஷ்ணா. இவரும் டிவிஎஸ் குழுமத்தின் இன்னொரு நிறுவனத்தை நிர்வகிக்கிறார். மூவரும் திரு. சுரேஷ் கிருஷ்ணாவின் மகள்கள். இதுவரை சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த...
"என்னப்பா இரகசியம், உன் முகம் எப்பவும் மகிழ்ச்சியா மலர்ச்சியா இருக்கு" என்று கேட்பவர்களுக்கு மத்தியில், சிலர் ஒனக்கு பிரச்சனையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கியே" என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டு நாள் திடீரென்று லீவு போட்டு...
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள்! கடந்த ஆண்டுக்கு முன் மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, உங்களது வங்கிக் கணக்கில் பெரு தொகை டெப்பாசிட் செய்தவரா? இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வந்து உள்ளதா? 'இத்தனை ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஆனால் வரும் நாட்களிலும் இப்படியே தொடர்வது இயலாதோ?' என்ற சந்தேகத்தில்... யோசனையில் இருப்பவரா?"வரி கட்டுவதும்,வரிக்கணக்கு தாக்கல்செய்வதும் சரிதான். ஆனால், அதற்கானஆடிட்டர் கட்டணமே பெரிய தொகைபோல தெரிகிறதே!" என்ற ஐயத்தில் உள்ளவரா கவலையை விடுங்கள்! மேலே சொல்லப்பட்டு...
திரு. டி. கதிர்வேல், அடிப்படையில் பொறியாளர். சிவில் எஞ்சினியரிங் துறையில் பட்டப் படிப்பும், அதன் பின் கட்டமைப்பு பொறியியல் (Structural Engg) பிரிவில் முதுநிலை பட்டமும், மதிப் பீட்டுத் துறையில் முதுநிலை பட்டமும் பெற்ற, கோவையைச் சேர்ந்த பொறியாளர். 1991ல் தொடங்கி, கடந்த 27 ஆண்டுகளாக மதிப்பீட்டுத் துறையில் பங்களித்து வரும் வல்லுநர். நிலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பிற வணிகம் சார் நிறுவனங்கள்...
கேள்வி: எனது தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை நிறுவனத்திற்கு சம்பளம் அளித்தல் மற்றும் சில சேவைகள் செய்கிறேன். இதற்கு ஜிஎஸ்டி உண்டா? பதில்: இவை தொழிலாளர்-தொழிலாளி உறவில் வராது என்றும் இதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும்Advance Ruling வந்து உள்ளது. கேள்வி: அண்மைய வரி சதவீதத்தில் அநேக பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதில் ஏற்கனவே நிர்ணயம் செய்து இருந்த அதிக பட்ச விலையை குறைக்க வேண்டுமா? பதில்: ஆம். இல்லை என்றால் சிஜிஎஸ்டி Section...
தான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல் நுனியில் இருக்கலாம், பன்பாடு, கலாச்சாரம், இந்திய வரலாறு, புவிசார் அரசியல், பொருளாதாரம், வியாபாரம் என எல்லா வற்றிலும் கைதேர்ந்தவராக இருக்கலாம். நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களில் எல்லோரும் ஏதொ ஒரு துறையில்...
நமது நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை, நம்பிக்கையை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பகடைக் காயாக உருட்டப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தி, மொத்த வருவாய், சராசரி வருவாய் உயர்கின்றது என்ற புள்ளி விவரங்களை நமக்கு முன் அள்ளி வீசுகின்றனர். ஆனால் நடைமுறை நிலைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நகரங்கள் விரைந்து வளர்கின்றன; மிகப் பெரிய கிராமங்கள் நகரத்தின் தோற்றப் பொலிவைப் பெறுகின்றன;...