fbpx
Home நேர்காணல்

நேர்காணல்

"என் தந்தையார் கயத்தாறு அல்ஹாஜ் அமீர் பாட்சா. அவர் தான் எனக்கு வாழ்க்கையில் மட்டும் அல்ல வணிகத்திலும் வழிகாட்டி. தாசில் தாரராக பணியாற்றி ஒய்வு பெற்ற அவர், வரவு செலவு கணக்கை தினமும் எழுதுவார். வருமானத்திற்குள் செலவு செய்து மிச்சம் பிடிப்பது எப்படி? என்பதை நான் பள்ளியில் படிக்கும்போதே அவரிடம் கற்றுக் கொண்டு விட்டேன் என்கிறார், ஏசியாஸ் எலக்ட்ரிகல்ஸ் திரு. தாஜ் முகமது. இவர் சென்னை பெரியமேடு, நாராயண செட்டி...
சென்னை புரசைவாக்கத்தில், கிரிக்கெட் மட்டை, கால்பந்து உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்யும் "சில்ட்ரன்ஸ் பேரடைஸ்" கடை நடத்தி வருகிறார் திரு. முகமது ஜமீல். 'ஸ்போர்ட்ஸ் கடை பாய்' என்றால் அந்தப் பகுதியில் அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழில் ஈடுபாடு, வாடிக்கையாளர்களுடன் அவர் வைத்து இருக்கும் இணக்கமான உறவு போன்ற பண்புகள் அவரை வெற்றியாளராக ஆக்கி உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக வணிகத்தில் தாம் கடந்து வந்த...
"அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உருவாகும் உலகத்தரம் வாய்ந்த ஆடியோ சாதனங்களுக்கு இணையாக நாங்களும் தயாரிக்கிறோம். அதே சமயம், வெளிநாட்டுக் கருவிகளின் விலையில் மூன்றில் ஒரு பாகமே எங்கள் பொருட்களின் விலை இருக்கும்'' என்கிறார் டார்வின் டெக்னாஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜான்தங்கச்சன். இசை உலகில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் திரு. ஜான்தங்கச்சன் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. இசைக்கு உயிராகத் திகழும் ஆடியோ சாதனங்களின் நுட்பங்களை ஆய்ந்து...
எல்லோராலும் தொழில் தொடங்கி இலாபகரமாக நடத்த முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். தகுதி வேண்டும். எந்தத் தொழிலும் இலாபகரமாக நடக்க வேண்டும். உண்மையில் சிலகாலமாக நம்மிற் பலர் தம்மையறியாமலேயே நாட்டுக்குத் தீங்கு பயக்கும் செயல் செய்து கொண்டு வருகிறார்கள். நாம் அன்றாடம் பார்க்கும் சினிமாப்படங்களில் கூட அதன் தாக்கம் தெரியும். அதாவது ‘பணக்காரர்கள் எல்லாம் மோசமானவர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் சுயநலவாதிகள்’ என்ற தவறான கருத்தைப் பெரும்பான்மையான ஏழைகள், அல்லது வசதி இல்லாதவர்கள்...
எம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு புதிய தொழில் முனைவோருக்கான, ஏற்றுமதியாளர் களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. தொழில் தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகளையும் நடத்துகிறது. மேலும் தொழில்கள் செய்முறை தொடர்பான எண்ணற்ற பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. குறு, சிறு,...
தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது, ''தென் இந்தியாவில் எந்த ஒரு பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் ஒட்டு மொத்த தென் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில்...
வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றை நடத்து பவர்கள் அவரவர் களுக்கு ஏற்ற வகையில், அவரவர் களுக்கு பிடித்த வகையில் நடத்தி வருகிறார்கள். சின்ன அளவிலான நிறுவனங்கள் முதல் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் உள்ளன. இவை வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் தொடர்பு எற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் உள்ள பணி வாய்ப்புக்கு ஏற்ப நேர்காணல்களுக்கு ஆட்களை அனுப்பி வைப்பார்கள். சில வேலை வாய்ப்பு நிறுவனங்கள்...
த ற்போது நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எச்ஆர் (HR) என்ற பதவியின் பெயர் முதன்மையாக பேசப்படுகின்றது. ஹியூமன்       ரிசோரஸ் என்பதன் சுருக்கப் பெயரான இந்த எச்ஆர் இந்த அளவுக்கு புகழ் பெற என்ன காரணம்? ஒரு நிறுவனத்தின் நிதியை மேலாண்மை செய்வதற்கு நிதி மேலாளர் இருப்பதைப் போல, உற்பத்தியை மேலாண்மை செய்வதற்கு உற்பத்தி மேலாளர் எனப்படும் புரடக்ஷன் மேலாளர் இருப்பதைப் போல பணியாளர்களை...
இருபத்தி நான்கு ஆண்டு கால இசைப் பயணத்தில் கிட்டார் வாசிப்பாளராக, மேடை இசையமைப்பாளராக, மெல்லிசைப் பாடகராக ஒலிப்பதிவாளராக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவர், திரு. ஸ்டீபன் ராயல். திரைப்பட                 இயக்குநர் சஞ்சய்ராம் உதவியுடன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இனி அவர் கூறியதிலிருந்து; "எனக்கு சொந்த ஊர் எல்லப்பட்டி. மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ளது. நான், என் தாய் தந்தைக்கு...
தமிழ்நாட்டில் உள்ள பெரிய மீனவ கிராமங்களில் நொச்சிக்குப்பமும் ஒன்று. இது சென்னை மெரினா கடற்கரையை யொட்டி அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஈடுபடுகின்றன. துறைமுகப் பணி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த வேலைகளில் படித்த இளைஞர்கள், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிற்றுண்டி கடை நடத்து வோர், விளையாட்டுப் பொருட்களை விற்கும் சிறு வியாபாரிகள், கூலித் தொழி லாளர்கள், இப்படி... இப்பகுதி மக்களை பிரிக்கும்போது,...