fbpx
Home வேளாண்மை

வேளாண்மை

ஏற்ற பருவம் : நவம்பர்- டிசம்பர் விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் . ஒரு எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவைப்படும். குழித் தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடுவதால் வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம். பன்னிரெண்டு நாட்கள் வயதுடைய நாற்றுகளை வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் செடிக்கு செடி 0.9 மீட்டர் இடைவெளி பார்களில்...
வாழை மேம்பாட்டிற்காக 1993-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) திருச்சியில் நிறுவப்பட்டது. இங்கு வாழை வகைகள் மேம்பாடு, வாழை உற்பத்தியை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய வாழை நிர்வாகம், வாழை பாதுகாப்பு என்பவை போன்ற அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப்...
கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண்முறை குறித்த உண்மையான தகவல் களை மறைத்து வேண்டும் என்றே பொய்ப் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வேளாண் வேதித்துறையின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளுள் ஒன்றான இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Crop Care Federation of India) கூறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வரும்...
பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில், கருவூட்டல் செய்யப்பட்டு பிறந்த கன்றுகளையும், பசுக்களையும் விவசாயிகள் விற்று விடாமல் இருக்க, கிடேரிக் கன்று வளர்ப்புக்காக மாதம்தோறும் பத்து ரூபாய் வீதம் மானியமாக வழங்கினார்கள். அந்தக் கன்று பசுவாக வளர்ந்து கன்று போடும் வரை அந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் தமிழ் நாட்டில் பல்லாயிரக் கணக்கான பசுக்களும், கன்றுகளும் விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பால் உற்பத்தி பெருகியது. சாணம், கோமியம் மண்ணிலேயே கலந்து மண்...
சில மாவட்டங்கள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் பெரிய அளவில் பயன் அடைந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய சிறு வயதில் இருந்தே கேரளாவில் மரவள்ளி சாகுபடியில் ஈடுபட்டு வரும் திரு. ஆர். அய்யாக்கண்ணு, மரவள்ளி பயிரிடுதல் தொடர்பான சில செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றில் இருந்து, ''படிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால் என்னை என் சிறுவயதிலேயே விவசாயப் பணிகளுக்கு கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே அங்கு மரவள்ளி சாகுபடிதான். அதனால்...
ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயி கள் பலர். இந்த வகையில் முயல் வளர்ப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகின் றனர்.. சின்ன அளவில் ஒரு முயல் பண்ணை அமைக்க ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் தேவை. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை வகை...
திருமதி. கிருஷ்ணவேணி, சென்னை குன்றத்தூரில் வசித்து வருபவர். தன் வீட்டருகே உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் காய்கறித் தோட்டம், வாழைத் தோட்டம், மாந்தோப்பு அமைத்து உள்ளதோடு, கீரைகளையும் பயிர் செய்கிறார். பரபரப்பான நகரத்துக்கு நடுவே பசுமையான இவர்களின் தோட்டத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தாங்கள் செய்யும் வேளாண்மை குறித்து திருமதி. கிருஷ்ணவேணி கூறும்போது, “காய்கறிச் செடிகளை முதலில் எங்கள் வீட்டுத் தேவைக்காக மட்டுமே வளர்த்தேன். பின்னர் படிப்படியாக அதிக அளவில்...
கடந்த ஃபெப்ரவரியில், மெம்பிஸ் நகரில், ஒரு கண்காட்சி மையம் நடத்தப்பட்டது. ஏராளமான வேளாண் துறை மற்றும் வர்த்தக வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டனர். இங்கு சார்லஸ் பாரோன் என்பவர், பங்கேற்றவர்களின் உணவுத் தட்டுகளில் துருவிய முட்டைகளை வைத்துப் பரிமாறினார். விதைகளின் விற்பனைச் சந்தை அவரது குடும்பத் தொழிலாகவே மாறிவிட்டது. குறைந்த லாபத்திற்கு இயற்கை விதைகளை உற்பத்தி செய்ய, மிகக் கடினமாக உழைக்கிறார் பாரோன். பாரோன், உழவர்களின் வர்த்தக நெட்ஒர்க் (எஃப்பீஎன்) நிறுவனத்தின் கூட்டு...
இஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் வேளாண்மையும், பால்பண்ணைத் தொழிலும் உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம் உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால் தருவது ஒரு வியப்பு ஆகும். இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும், ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம். நாளொன்றுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால் தந்த பலாடி இனப் பசுக்கள்...