fbpx
Home தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம் பற்றியும், அதன் மேலாண் இயக்குநர் திரு. விகேடி. பாலன் பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து சென்னைக்கு வந்து, தன்னுடைய உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி வந்த கதையை அறிந்து ஊக்கம் பெற்ற தொழில் முனைவோர் எண்ணற்றவர்கள். இவர் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளுகை செய்த 'வெளிச்சத்தின் மறுபக்கம்' இவருடைய சமுதாய அக்கறையை வெளிக்காட்டிய...
அண்மைக் காலங்களில், உலகெங்கிலும் உள்ள சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிளாஸ்டிக்கிற்கு ஆன எதிர்ப்புக் குரல் போதுமான அளவு அறிவியல் அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக் குறித்து ஒரு பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தி உள்ளது. நடுவண் அரசு 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை மட்டும் பயன்படுத்துப்படும்...
வணிகர்களின் மகன்களுக்கு வணிகம் செய்யும் இயல்பு தங்கள் தந்தைகளிடம் இருந்து இயல்பாகவே கிடைத்து விடுகிறது. அண்ணாமலை செல் சிட்டி என்ற மொபைல் ஃபோன் கடையை பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. காசிராஜன், தன் மகன் திரு. பவித்ரனையும் தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் தந்தையுடன் வணிகத்தை கவனித்து வரும் திரு. பவித்ரன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் மொபைல்...
இன்றைக்கு நிறைய கல்லூரிகளில் பிபிஏ, எம்பிஏ போன்ற தொழில், வணிகம் சார்ந்த படிப்புகள் உள்ளன. ஏராளமான மாணவர்கள் இவற்றில் சேர்ந்து படிக்கின்றனர். இத்தகைய படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவியரிடம் அந்த படிப்புகள் தொழில் முனைப்பு ஆர்வத்தைத் தூண்டுகின்றனவா, அவ்வாறு தூண்ட கல்லூரிகள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கின்றன என்ற கேள்வியோடு, சென்னை போரூருக்கு அருகே உள்ள கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறைத் தலைவர்...
பெரிய அளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடை பின்னுவது, தையல் ஆகியவை உதவும் என்கிறார், சிதம்பரம் அருகே உள்ள கோணயாம் பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஜமுனா ராணி. இவரிடம் அது எப்படி என்று கேட்டபோது, ''நான் பத்து ஆண்டுகளாக வீட்டில் இருந்தே தையல் மற்றும் கூடை பின்னுவது ஆகியவற்றை செய்து வருகிறேன். நான் வாழ்வது ஒரு சிறிய கிராமமாக இருப்பதால் தையல் பயிற்சியில்...
நல்ல பெயின்டர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் நாள் ஊதியத்துக்கும் பணி புரிகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிகிறார்கள். பெயின்டர்களுக்கான தொழில் வாய்ப்பு எப்படி இருக்கிறது? சென்னை, போரூரில் பெயின்டர் ஆக இருக்கும் திரு. சையது இடம் கேட்ட போது, அவர் தன் தொழில் பற்றியும் பெயின்டிங் தொடர்பான சில நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டார். ''நான் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கும் முன் ஒரு தனியார் ஒப்பந்த...
பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவது இல்லை, தொழிலின் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு செல்லும் போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேளை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற...
தான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல் நுனியில் இருக்கலாம், பன்பாடு, கலாச்சாரம், இந்திய வரலாறு, புவிசார் அரசியல், பொருளாதாரம், வியாபாரம் என எல்லா வற்றிலும் கைதேர்ந்தவராக இருக்கலாம். நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களில் எல்லோரும் ஏதொ ஒரு துறையில்...
விடுதிகள் நிறைந்த சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் எந்த உணவகம் திறந்தாலும் விற்பனைக்கு குறைவு இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்கிறார், திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் அபிநயா உணவகம் நடத்தும் முனைவர். ஜோதிபாசு. ஊடகத் துறையைச் சேர்ந்த இவர் எப்படி உணவகத் தொழிலுக்கு வந்தார்? அவரிடம் கேட்டபோது, ''தஞ்சை மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள பழுக்காடு எங்கள் சொந்த ஊர். உள்ளூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2011-ல் பிளஸ்...
சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் 'வானமே எல்லை'. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை 'வானமே எல்லை' நிகழ்ச்சியில்...