Home அனுபவ கதைகள்

அனுபவ கதைகள்

திரு. தி. நாராயணசாமி பன்முகத்திறன் கொண்டவர். வங்கியில் இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வணிகத்தில் கால்பதித்தவர். பித்தளை, அலுமினியம் போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் விற்பனை மையங்களை நடத்தியவர். தற்போது, ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த நாற்பது ஆண்டுகளில், தம் தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நேரத்திற்கு ஈடாக சமூக பணிகளிலும் ஈடுபட்டவர். தன்...
ஒரு குறிப்பிட்ட ஆந்திர ஐஸ்கிரீம் நிறுவனத்திடம், அவர்கள் ஐஸ்கிரீமை விற்பனை செய்ய தனி உரிமைக் கிளை (ஃப்ரான்சைஸ்) கேட்டபோது, அந்த நிறுவனத்தில் இருந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட அந்த நிறுவன அலுவலர்கள், இந்த இடத்தில் நம் ஐஸ்கிரீம் விற்பனை ஆகாது என்று தனி உரிமைக் கிளை தர மறுத்து விட்டார்கள். இதையே ஒரு சவாலாக ஏற்று அதே இடத்தில் தானாகவே ஒரு ஐஸ்கிரீம் விற்பனையகத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக...
சென்னையில் உள்ள புனித இசபெல் மருத்துவமனையில் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர் திரு. ஜான்சன். இவருடைய மகன் திரு. பிரகாஷ் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மயிலாப்பூரில் ஒரு தேநீர்க் கடை நடத்தி வருகிறார். ஒய்வு பெற்ற பிறகு தனி ஆளாக ஒரு கடை நடத்தும் அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார். '' நான் ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது...
- திரு. ஜான் எட்வின் பேட்டி பன்றி இறைச்சி உண்ணுபவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் பன்றிப் பண்ணை வைத்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்கிறார், திரு. ஜான் எட்வின். கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை, காயக்கரைக்கு அருகே சித்திரம் கோடு என்ற ஊரில் அமைந்து உள்ள தன்னுடைய பன்றிப் பண்ணையை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது, '''நான் எனது பன்றிப் பண்ணையில் வெள்ளைப் பன்றிகளையே...
சிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் ஊழியர்களை நன்றாக வழி நடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்ல வேண்டும். முடிந்தால் அதை எழுதிக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக வேலை நடக்கும். நீங்கள் பட்டும் படாமல் ஒரு செய்தியை சொல்லி விட்டு பின் அது...
நிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் 'ஏ' பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை 'பி' ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் 'ஏ' பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர். அதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து...
சீன விவசாயி ஒருவரின் வீட்டிற்கு அருகே தவளைகள் நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் ஏராளமான அளவிற்கு, அதாவது நூற்றுக் கணக்கில் தவளைகள் இருப்பதாக கருதினார். நீண்ட நாட்களாக அவை இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருப்பது அவருக்கு எரிச்சலாக இருந்தது. நகரில் உள்ள அவருடைய நண்பரிடம் சென்று, ''என் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் உள்ள நூற்றுக் கணக்கான தவளைகள் இரவெல்லாம் கத்தி என்னைத் தூங்க விடாமல்...
பணம் சேர்ப்பது பாவச் செயல் என்றும், செல்வந்தர்கள் செல்வத்தால் அல்லல்படுகிறார்கள் என்ற பணம் சம்பாதிப்பதற்கு எதிரான ஒரு பார்வையை இன்றும் சிலர், குறிப்பாக மத போதகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது ஒரு தவறான கருத்து ஆகும். ."ஏழை கால் வயிற்றுக் கஞ்சியைக் குடித்தாலும் நிம்மதியாய்த் தூங்குவான், கோடீஸ்வர்கள், பணக்காரகளுக்கு நிம்மதி என்பது இருக்காது. தூக்கம் வராது" என்று போலியான, பாசாங்கான கருத்துகளை தங்களுக்குத் தாங்களே சொல்லி...
அது வர்த்தகப் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் நிறுவனம். அங்கு விற்பனை மேலாளர் பதவி காலியாக இருந்தது. அதற்காகப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர். அந்தப் பதவிக்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அன்று நேர்முகத் தேர்வு ஏராளமானோர் வந்திருந்தனர். வந்தவர்கள் பட்டதாரிகள், விற்பனைத் துறையில் அனுபவம் நிறைந்தவர்கள். பலரும் தங்களுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைத்து விடாதா என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஒவ்வொருவரையும் அலுவலக உதவியாளர் பெயர் சொல்லி அழைத்துச் சென்றார்....
மின் பணியாளர்களின் தேவை அதிகரித்து வரும் காலம் இது. எல்லா அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் அவசரத் தேவைக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இந்த துறையில் படித்தவர்களும் வெற்றி பெறுகிறார்கள். கல்வி நிறுவனங்களில் படிக்காமல், எலெக்ட்ரீஷியன் ஒருவரிடம் உதவியாளராக இருந்து கற்றுக் கொண்டு தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரு. ஜி. கோபி, குன்றத்தூரில் ஜிஎஸ் எலெக்ட்ரிகல் என்ற பெயரில் மின்சாதனங்கள் விற்பனையகம் ஒன்றை நடத்தி வருவதோடு வீடுகள், அலுவலகங்களுக்கான மின் பணிகளையும் செய்து...