Friday, May 20, 2022

Latest Posts

சப் இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு- பயிற்சி அளிக்கிறது, சிவந்தி அகாடமி

- Advertisement -

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்க விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் (ஏப்ரல்) 17-ம் தேதி. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினரும், 32 வயதுக்கு மிகாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும், 35 வயதுக்கு மிகாத எஸ்சி, எஸ்டி பிரிவினரும் இந்த தேர்வை எழுதலாம்.

இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது. வருகிற 24-ம் தேதி முதல் மே மாதம் 17-ம் தேதி வரை உடற்தகுதி மற்றும்  எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் வாயிலாக நடைபெறுகின்றன. பயிற்சி வகுப்பு நடைபெறும்போது  வெளியில் செல்ல, விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

காலை 6.30 முதல் 8.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கயிறு பிடித்து ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தய பயிற்சிகள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். பயிற்சியின் போது எட்டு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். பத்து மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.7000. வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனி விடுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விடுதிக்கான கட்டணம் ரூ.7500. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 7092942644, 9961294426.

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news