இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான கண்காட்சி புது டெல்லி, பிரகடி மைதானத்தில் வரும் ஏப்ரல் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது. இந்த காட்சியில் 150 க்கும் மேற்பட்ட காற்றாலை தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
காற்றாலை டர்பைன்களின் இயங்குதள அளவை அதிகரிப்பது, அதிக உள்நாட்டுமயமாக்கல், எளிதான நிதியளிப்பு வழிமுறை, நிகர-பூஜ்ஜிய உமிழ்வுக்கான தேசிய உறுதிப்பாட்டை அடைதல், மற்ற தொழிற்துறைகளுடன் கைகோர்ப்புகள் குறித்து இங்கு நடைபெற இருக்கும் மாநாடுகளில் ஆலோசிக்கப்படும்.
காற்றாலை ஆற்றல் வளர்ச்சி குறிப்பாக கிராமப்புறங்களில் கூடுதலாக 2 மில்லியன் வேலைவாய்ப்புகளு உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு. ஆர்.கே. சிங் (மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கேபினட் அமைச்சர்), திரு. பக்வந்த் குபா (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர்), டேனிஷ் தூதர் திரு. ஃப்ரெடி ஸ்வானே,திரு. சுனில் குமார் (எரிசக்தி அமைச்சர், கர்நாடக அரசு) ஆகியோருடன் மற்ற உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் கலந்து கொள்ளும் உயர்மட்ட மாநாடும் நடைபெற இருக்கிறது.
IWTMA, தலைவர், திரு.துள்சி தந்தி கூறுகையில் “COP26 இல் நமது லட்சிய இலக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கேற்ப, RE உற்பத்தியில் உலகளாவிய முதலீட்டை பெற இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. IWTMA இல், நமது எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், மின்செலவைக் குறைப்பதற்கும் RE முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில், இந்தியாவை கார்பன் இல்லாத நாடாக மாற்றுவதற்கு க்ரீன் அம்மோனியா, க்ரீன் மீத்தேன் மற்றும் க்ரீன் ஹைட்ரஜனுக்கான சிறந்த தளம் அமையும்.
காற்றாலை தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, குஜராத் மாநிலத்திற்கு இணையாக கடலோர காற்றாலைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறோம். IWTMA 20 ஆண்டுகளுக்கும் மேலாக காற்றாலைகளை அதிகரிப்பதில் வெற்றி பெற்று வருகிறது. விண்டர்ஜி தொழில்துறை, அரசாங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது” என்றார்.
இந்திய காற்றாலை மின் துறையானது ஆண்டுதோறும் 10,000 மெகாவாட் காற்றாலை டர்பைன்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இது 15,000 மெகாவாட் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறது.
Windergy India 2022, இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம் (IWTMA) மற்றும் PDA டிரேட் ஃபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA), இந்திய எரிசக்தி சேமிப்புக் கூட்டணி (IESA), இந்திய காற்றாலை சக்தி சங்கம் (IWPA), இந்திய காற்றாலை ஆற்றல் சங்கம் (InWEA) , இந்திய சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கம் (IPPAI), தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE), சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI), பசுமை வேலைகளுக்கான திறன் கவுன்சில் (SCGJ), உலக காற்றாலை ஆற்றல் சங்கம் (WWEA), தேசிய சிறு தொழில் கழகம் (NSIC), REAR – Renewable Energy Association, மற்றும் The Energy and Resources Institute (TERI), டென்மார்க் தூதரகம் ஆகியவை இந்த காட்சிக்கு ஆதரவு வழங்கி உள்ளன.
இந்தியாவிலேயே காற்றாலை ஆற்றலின் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. 1980-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், DANIDA உதவியுடன் காற்றாலைகளின் செயல்விளக்கம் அமைக்கப்பட்டது. சிறிய மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் டிஸ்காம்களுக்கு(DISCOMs) மின்சாரத்தை விற்பதன் மூலம் 100% தேய்மான வருமான வரிக் கழிவை (AD) பயன்படுத்தினர்.
தமிழ்நாடு 35 ஜிகாவாட் கடல்சார் ஆற்றலை கொண்டுள்ளது. GW RE என்ற பாராட்டத்தக்க இலக்குடன் செயல்படும் என்று உறுதியளித்துள்ளது. நமது முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் இயற்கையின் இந்த அருட்கொடை கடலோரம் மற்றும் கரையோரம் ஆகிய இரண்டிற்கும் விரைவுபடுத்தப்படும் என்று தொழில்துறையினர் நம்புகின்றனர். காற்றாலை ஆற்றல் வளர்ச்சியின் நான்கு தூண்கள் மாநிலத்திற்கு புதிய முதலீடு, புதைபடிவமற்ற மின் உற்பத்தி, ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பது மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: வைதேகி – 9841305615 / சக்திவேல் – 9841108528