இ – வே பில் தடை நீக்கம் எவ்வாறு நிகழும்?

வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்க தொடர்

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ஒரு பொருளை விற்பனை செய்யும் வரி செலுத்துபவர், அதை போக்குவரத்து வாகனம் மூலம் கொண்டு செல்ல அல்லது பெற, பொது வலைதளத்தில் உருவாக்க வேண்டிய ஆவணமே மின்வழிச் சீட்டு (இ-வே பில்) ஆகும்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வரி செலுத்தும் அனைவரும் உரிய நேரத்தில் வரிப் படிவத்தை தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

ஜிஎஸ்டி சட்டம் அறிமுகபடுத்தியப் பின், பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சிலர் வரிப் படிவத்தை மாதம் ஒரு முறையோ (அ) காலாண்டுக்கு ஒரு முறையோ உரிய நேரத்தில் வரிப் படிவம் தாக்கல் செய்து வரி செலுத்துவது இல்லை. ஆனால் வணிகத்தை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பொருள்களின் இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களை உரிய நேரத்தில் வரிப் படிவத்தை தாக்கல் செய்ய வைக்கவும், வரி செலுத்த வைக்கவும் இ-வே பில்லை தடை செய்வது என்று அரசு முடிவு செய்து உள்ளது. வரி செலுத்தாத வணிகர்களின் வணிகத்தை நிறுத்துவதோ, அவர்களின் வணிகத்திற்கு இடையூறு செய்வதோ அரசின் நோக்கல் இல்லை.

அரசின் அறிக்கை எண் : 36/2019 நாள் 20/08/2019; 75/2019 நாள் 26/12/2019 படி 01/12/2019 முதல் விதி எண் 138-E திருத்தப் பட்டு இ-வே பில் தடை நீக்கம் /மீட்டுதல் நடைமுறைப் படுத்தபட்டு உள்ளது.

Also read: வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்க தொடர்: கல்வி நிறுவன சேவைகளுக்கு வரி விதிக்க முடியுமா?

விதி எண் 138-E செயல் படுத்தப்பட்டால், ஒரு வரி செலுத்துபவர், தொடர்ந்து அண்மை வரிப் படிவத்தை இரண்டு மாதம் அல்லது இரண்டு காலாண்டுக்கு தாக்கல் செய்யாவிட்டால், இந்த தகவலை இ-வே பில் வலைத்தளம் ஜிஎஸ்டி பொது வலை தளத்திற்கு தகவல் தெரிவிக்கும். இதனால் இ-வே பில் உருவாக்கம் தடை செய்யப்பட்டு அதை உருவாக்க முடியாத நிலை ஏற்படும்.

இ-வே பில் உருவாக்காமல் விட்டால் வணிகரால் விற்பனை செய்ய எந்த பொருளையும் ஒரு போக்குவரத்து மூலம் அனுப்பவோ, பெறவோ முடியாது. பொருளை பெறுபவரோ (அ ) வாங்குபவரா கூட இ-வே பில்-ஐ உருவாக்க முடியாது. அப்படியும் இ-வே பில் வலைதளத்தில், இ-வே பில் தயாரிக்க முயற்சி செய்தால், இ-வே பில் வலைத்தளம் நகராது மற்றும் இ-வே பில்லிற்கான ஜிஎஸ்டி படிவம் EWB-01 இல் பகுதி -அ வை உருவாக்க அனுமதிக்காது.

இ-வே பில் தடை நீக்கம் செய்யப்பட்ட வரி செலுத்துபவர் பொது வலை தளத்தில் வரிப் படிவம் தாக்கல் செய்தவுடன், அடுத்த நாள் காலை அவருடைய ஜிஎஸ்டி எண் தடை நீக்கம் செய்யப்பட்டு இ-வே பில் உருவாக்க அனுமதிக்கும்.

வரி செலுத்துபவர் மறுநாள் காலை வரை பொறுத்து இருக்க முடியாது, வரிப் படிவம் தாக்கல் செய்தவுடனேயே இ-வே பில் உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், அவர் இ-வே பில் வலைத்தளம் சென்று, தேடல் – தடுப்பு நிலையை புதுப்பித்தல் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவருடைய ஜிஎஸ்டி எண்ணை பூர்த்தி செய்து, அவருடைய நிலையை (Status) பார்க்க வேண்டும். அப்பொழுதும் தடை நீக்கம் செய்யப் படாமல் இருந்தால், புது நிலைக்கு கொண்டு வரும் விருப்பத்தை தேர்வு செய்து, ஜிஎஸ்டி பொதுவான வலை தளத்தில் இந்த வரிப் படிவம் தாக்கல் செய்த சமீபத்து நிலையை சரி செய்தால் இ-வே பில் தடை நீங்கும், உடனடியாக இ-வே பில் உருவாக்கலாம்.

மேற்சொன்ன இரு செயல்களை செய்தப் பின்னும், இ-வே பில் தடை நீக்கம் செய்யப் படாவிட்டால், ஜிஎஸ்டி உதவி சேவை (gst help desk) பிரிவுக்கு புகாரை அனுப்பி, தடை நீக்கம் பெறலாம்.

இ-வே பில் உருவாக்கம் தடுக்கப்பட்ட ஜிஎஸ்டி எண்ணில் இருந்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட இ-வே பில்களால் எந்த விளைவும், தாக்கமும் இருக்காது. இந்த பில் செல்லுபடியாகும். எந்த சிக்கலும் இல்லாமல் பொருள்கள் அதன் இலக்கை சென்று அடையும். தேவைப்பட்டால் இந்த இ-வே பில்லுக்கு வரி செலுத்துபவரோ அல்லது போக்குவரத்து நிறுவனமோ போக்குவரத்து விவரங்களை பூர்த்தி செய்து விதிப்படி கால நீடிப்பு செய்யலாம்.

போக்குவரத்து நிறுவனத்தின் அடையாள எண் தடுக்கப்பட்டால் என்ன ஆகும்?

போக்குவரத்து நிறுவனங்கள் இரு வகைப் படும்:

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டது

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல், ஜிஎஸ்டி வலைதளத்தில் தனித்துவமான 15 இலக்க எண் ஒதுக்கப் பட்டு அடையாள எண் பெற்ற போக்குவரத்து நிறுவனம்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அண்மைய இரண்டு மாதங்களுக்கு வரிப் படிவம் தாக்கல் செய்யாத போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் பொருள் அனுப்பப் பட்டால் இ-வே பில் உருவாக்கம் தடுக்கப்படும். ஆனால் பதிவு செய்யாமல், ஜிஎஸ்டி வலைதளத்தில் தனித்துவமான 15 இலக்க எண் ஒதுக்கப்பட்டு அடையாள எண் பெற்ற போக்குவரத்து நிறுவனத்தின் எண்ணை குறிப்பிட்டு இ-வே பில் உருவாக்கம் செய்வதில் எந்த சிக்கலும் எல்லை.

எந்த படிவம் தாக்கல் செய்யப்படாவிட்டால் இ-வே பில் உருவாக்கம் தடுக்கப்படும்?

ஜிஎஸ்டி வலைதளத்தில் வரிப் படிவம் GSTR 3-B தாக்கல் செய்யாவிட்டால் இ வே பில் உருவாக்கம் தடுக்கப் படும் வணிகர்கள் பொருளை விற்பனை செய்யும் பொழுது, அதற்குரிய வரியை அரசு சார்பாக வசூல் செய்து விட்டு அதை அரசுக்கு செலுத்தாமல் இருப்பத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. மேலும், வரி வசூல் செய்தப்பின் அதை அரசுக்கு செல்லத்தாமல் இருந்தால் வரி செலுத்துபவரின் வங்கி கணக்கையும் முடக்கும் திட்டமும் எதிர் காலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பொருளை பெறுபவர் பில் உருவாக்க முடியுமா?

இ-வே பில் உருவாக்கம் தடுக்கப் பட்டு இருந்தால், பொருளை பெறுபவர், அனுப்பு பவர் ஆகிய இருவருமே அவர்கள் இடையே இ-வே பில் உருவாக்க முடியாது. அதே போல் போக்குவரத்து நிறுவனமும் இவர் களுக்கு இ-வே பில் உருவாக்க முடியாது.

வலைத்தளத்தில் வாகன எண் சரி பார்த்தல்:

இ-வே பில் வலைத்தளம் தற்போது அரசின் போக்குவரத்து துறையோடு ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளது. இ வே பில்லில் பூர்த்தி செய்யப் படும் ஒவ்வொரு வாகனத்தின் எண்ணையும் இந்த வாகன அமைப்பு சரி பார்க்கும். அந்த எண் உடைய வாகனம் பதிவு செய்யப் படவில்லை என்றால், அப்படி ஒரு வாகனம் இல்லை என்று இ-வே பில் உருவாக்குபவருக்கு ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பும். உடனே அந்த மாநில போக்குவரத்து துறையுடன் தொடர்பு கொண்டு வாகன பதிவை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த வாகன எண்ணை பயன்படுத்தி இ-வே பில் உருவாக்க முடியாது.

Also read: பதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்?

வாகன எண்ணை சரி செய்வது எப்படி?

சில நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டிவோக்களில் அதே வாகன எண் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக செய்தி வரும். இதை உரிய/சரியான ஆர்டிவோவை அணுகி உடன் சரி செய்ய வேண்டும். வாகன எண் சரியாக இருந்தும், எச்சரிக்கை செய்தி வந்தால், தொடர்புடைய ஆர்டிவோவை அணுகி வாகன விவரத்தை திருத்தம் /சரி செய்ய வேண்டும். இது சரி செய்யப்பட்ட உடன் இ-வே பில் வலைதளத்தில் பில் தானாக புதுப்பிக்கப்படும். தற்காலிகமான பதிவு எண் கொண்ட வாகனமாக இருந்தால், எண்ணுக்கு முன் TR என்று குறிப்பிட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பில் உருவாக்கலாம். நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை vahan.nic.in/nrservice/facesuser/searchstatus.xhtml. என்ற இணைய முகவரி யில் எப்போதும் சரி பார்க்கலாம்.

[FORM GST EWB-01
(See rule 138)
E-Way Bill E-Way Bill No. :
E-Way Bill date :
Generator :
Valid from :
Valid until :
PART-A
A.1 GSTIN of Supplier
A.2 Place of Dispatch
A.3 GSTIN of Recipient
A.4 Place of Delivery
A.5 Document Number
A.6 Document Date
A.7 Value of Goods
A.8 HSN Code
A.9 Reason for Transportation
PART-B
B.1 Vehicle Number for Road
B.2 Transport Document Number/Defence
Vehicle No./ Temporary Vehicle
Registration No./Nepal or Bhutan Vehicle
Registration No.

– சு. செந்தமிழ்ச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here