இறக்குமதியாகும் பிளாஸ்டிக்: சுங்க வரியைக் குறைக்க வேண்டும்!

உள்நாட்டில் மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, அவர்கள் விற்பனை பாதிக்காமல் இருக்க ஏற்கனவே நடுவண் அரசு பல்வேறு பாதுகாப்புகளை வழங்கி உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில், இந்தியாவுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து, அதனால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால், அவை களை பாதுகாக்க மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் வேண்டு கோளின்படி பொருள் குவிப்பு வரி (Anti dumping duty) விதிக்கப்படுகிறது. இதைப் போல ஏற்கனவே பல பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு பொருள் குவிப்பு வரி போடப்பட்டு உள்ளது.

Also read: பிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன?

இந்தியாவில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்ற பொருட்களைப் போல் தங்கு தடையின்றி மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எந்த வித தடையும் இல்லை. தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். அதற்கு உண்டான சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம். தற்போதே இந்தியாவில் செயற்கையாக மூலப் பொருட்கள் தட்டுப்பாட்டை உருவாக்க அதைத்தான் பெரிய நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

இறக்குமதியாகும் பல பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு (BIS standard) இருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்க ஏற்பாடுகள் நடைபெறு கின்றன. நடுவண் அரசு அதற்கு கூறும் காரணங்கள், இறக்குமதியாகும் மூலப் பொருட்கள் பாதுகாப்பாகவும், மற்றும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பது ஆகும். மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதியானால் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்து விடும் என்கின்றனர்.

ஆனால் உண்மை நிலை, பெரும்பாலான இறக்குமதியாகும் மூலப்பொருட்கள் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை விட அளவிலும், தரத்திலும், விற்பனையிலும் பெரிய நிறுவனங்கள் ஆகும்.

அவர்கள், தங்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, உயரிய தரத்தைப் பின்பற்றும் நிறுவனங்கள்தான். அது அல்லாமல் அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யும்போதே, அனைத்து தரச்சான்றிதழ் கள், மற்றும் இந்தியாவில் நம் இடத்திற்கு வந்து சேரும் வரை முழு காப்பீடு என அனைத்தையும் உறுதிமொழி ஏற்றுதான், இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு தரம், பாதுகாப்பு என்கின்ற கேள்வியே தற்போது வரை எழுந்ததில்லை.

இந்தியாவில் உள்ள சிறு, குறு நிறுவனங் களுக்கு உலக மார்க்கெட்டில் மூலப் பொருட்கள் என்ன விலைக்கு கிடைக் கிறதோ அந்த விலைக்கு இந்தியாவில் கிடைத்தால்தான், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை குறைந்த விலையில் தயாரித்து, போட்டி போட முடியும். சிறு, குறு நிறுவனங்கள் காலத்திற்கேற்ப சரிசமமாக, சலுகைகள் கேட்காமல் தொழில் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், பெரிய நிறுவனங்கள் போட்டி இன்றி அதிக லாபம் சம்பாதிக்க அவர் களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் சலுகைகளும் செய்து கொடுப்பது மக்கள் நல அரசுக்கு பொருத்தமற்றது ஆகும்.

Also read: பிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள்

இறக்குமதியாகும் பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்துவதும், தேவையற்ற கட்டுப் பாடுகளை விதிப்பதும், மேலும் பல்வேறு காரணங்களால் சிறு, குறு நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் எழ முடியாத நிலைக்கு தள்ளி விடும்.

ஆகவே, நடுவண் அரசு சிறு, குறு நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது உள்ள சுங்க வரியை ஏற்கனவே பழைய நிலையில் இருந்த 5% அளவுக்கு குறைத்தும், தேவையற்ற கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

– சங்கரன், தமிழ்நாடு-பாண்டி பிளாஸ்டிங் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here