ஒரு சேவையின் அளவுகோல்!

துவைக்கும் எந்திரம் பழுதாகிவிட்டால், நமக்குத் தெரிந்த சில வழிமுறைகளை வைத்துக் கருவியை இயக்க முயல்வோம். பயன் இல்லை என்றால், பிறகு எந்திரத்தின் மேல் பதிக்கப்பட்டு இருக்கும் TOLL FREE எண்ணுக்குத் தொடர்புக் கொள்ளுவோம். எங்கள் வீட்டிலும் இதே நிலை ஏற்பட்டது. தொடர்பு கொண்டோம். அந்த நிறுவனத்தின் சார்பில், மெக்கானிக் ஒருவர் வந்தார்.

கருவியைப் பிரித்து மோட்டார்தான் பழுது என்று கண்டு பிடித்தார். இன்று புது மோட்டார் கொண்டு வர இயலாது, நாளைக்கு கொண்டு வருகிறேன் என்று தெரிவித்து விட்டு, அதற்கான கட்டணம், பழுது பார்க்க கூலி எல்லாவற்றையும் கூறினார்.

Also read: கூடுதல் வலு கிடைக்கும்

மறுநாள் புதிய மோட்டாரைப் பொருத்தி, எந்திரத்தை இயக்கினார். மொத்தத் தொகையையும் பெற்றுக் கொண்டு சென்றார். மொத்த செலவு – ரூ.2000 (புதிய வாஷிங் மெசினின் விலை ரூ.15000க்கு மேல்) இதில் குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புகள் சில இருக்கின்றன.

பொதுவாக விடுமுறை நாளென்றால், பதிவு செய்யப்பட்ட பதிலே வரும். இந்த நிறுவனம் அது போலச் செய்யவில்லை. எல்லா மெக்கானிக்குகளுமே, செலவு ஆகும். கேரன்டி இல்லை. புதியது வாங்க வேண்டும் என்று கூறி விற்பனை செய்வார்கள். ஆனால் அந்த ஊழியர் அவ்விதம் ஊழியர் நடந்து கொள்ளவில்லை. மறுநாளே, அந்த இல்லத் தலைவிக்கு பில், வாட்சாப்பில் வந்து விட்டது. இந்த மாதிரியான ஊழியர்கள் பணி புரிவதால்தான், அந்த நிறுவனமும் முன்னேறுகிறது என்றே சொல்லலாம்.

வேறொரு அனுபவம், வங்கி சார்ந்தது. முன்னாள் வங்கி ஊழியர்களுக்கு என்றே சில சலுகைகள் உண்டு. டெபாசிட்டில் கூடுதலாக அரை சதவிகிதம் காசோலை தபாலில் வந்தால், கட்டணம் விதிக்காமை போன்றவை. ஆனால் எனது வங்கிக் கணக்கு, 2010-11ல் புதிய முறைக்கு (CBS) மாற்றும்போது, Codeஐ மாற்றவில்லை.

அதாவது, வாடிக்கையாளர் களுக்கு 1010 என்றால், ஊழியர்களுக்கு 1110. இதனால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை புது காசோலை பெறும்போது எல்லாம், கட்டணம் கணக்கில் பற்று ஆகியது.

Also read: விற்பனையும், மார்க்கெட்டிங்கும் ஒன்றா? வேறுவேறா?

புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளரிடம் விசாரித்தேன். அவர் தெளிவான பதிலை அளித்தார். ஆண்டுக்கு50 காசோலைகளுக்கு (செக்) மேல் செலவானால் மட்டுமே, பற்று வைப்பார்கள். இதில் எந்த பாகுபாடும் இல்லை. சேவிங்ஸ் கணக்குக்கு இப்படித் தான் தொடர்ந்து, இப்போது எல்லாம் வாரம் இருமுறை நிறைய மாற்றங்கள் வருகின்றன. வாடிக்கையாளர் களிடம் விளக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்றார்.

மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்விலும், ஓர் உண்மை விளங்குகிறது. குறைவான விலை, தரமான பொருள் மட்டுமே சேவைக்கு அளவுகோல் ஆகாது. சிலவற்றுக்கு உடனடி கவனிப்பு, (Washing Machine Repair) கனிவான மற்றும் திருத்தமான பதில் போன்ற சிறப்புகளும் சேவையில் அடங்கும்.

– வாதூலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here