புதிய நிறுவனம் தொடங்க சுற்றுச்சூழல் குழுவில் பதிவு செய்வது அவசியமா?

வியாபார நடவடிக்கைகளை தொடங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் வருமானவரித்துறையில் பதிவுசெய்து PAN எனும் வருமானவரி பதிவுஎண் பெற வேண்டும். அவ்வாறே தாம் வழங்கும் தொகை குறிப்பிட்ட வரம்பிற்குமேல் செல்லும்போது அதற்கான வருமான வரியை பிடித்தம் செய்து வழங்குவதற்காக வருமானவரித்துறையில் பதிவுசெய்து TAN எனும் மற்றொரு பதிவு எண் பெறவேண்டும். அதைவிட தற்போதைய பரிமாற்ற தொகை ரூ. 50,000/-திற்கு மேல் எனில், ஆதார் எண் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், வியாபார நடவடிக்கைகளுக்கு பத்து பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் வர்த்தக உரிமமும் (Trade License) கடைகள், நிறுவனங்களுக்கான உரிமமும் (Shops and Establishment License) தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து பெறவேண்டும்.

விற்பனை வருமானம் ரூ. 20 லட்சத்திற்கு மேல் உயரும்போது கண்டிப்பாக புதிய ஜிஎஸ்டி படி, (GSTIN) பதிவுசெய்து அதற்கான பதிவு எண் பெறவேண்டும்.

Also read: வணிக நிறுவனத்தை துவங்குவதற்கு இந்திய அரசால் எடுக்கப்பட்ட முன் முயற்சிகள்

வியாபார நிறுவனம் தொடக்க நிறுவனமாக, வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமா, தனிநபர் நிறுவனமா, தனியார் நிறுவனமா, பொது நிறுவனமா என அதன் துறை அமைச்சகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும்.

தொடங்க இருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ. 15,000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்புநிதி (EPF) நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நாம் தொடங்க இருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ 21,000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் மாநில காப்பீடு (ESI) நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் அல்லது அந்நிறுவனத்தில் இருந்து விலக்கு சான்றிதழ் பெறவேண்டும்.

நிறுவனம் செயல்பட போகும் உள்ளூராட்சி அலுவலகத்தில் (நகராட்சி, பேரூராட்சி) தொழில் வரி, இதர தண்ணீர்வரி போன்றவைகளுக்கு பதிவு செய்ய வேண்டும்.

நிறுவனத்தில் சில பணிகளை 10 பணியாளர்களை விட கூடுதலாக வெளியாட்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தினால் ஒப்பந்த பணியாளர் சட்டத்தின்கீழ், தொழிலாளர் ஆணையரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Also read: ஏற்றுமதி தொழில் முனைவோர்களின் வர்த்தக நிலை

வியாபார நிறுவனம் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தாது, குறிப்பிட்ட வரையறைக்குள் வியாபார நடவடிக்கைகள் அமையும் என சுற்றுச்சூழல் கட்டுபாட்டு குழுவில் பதிவுசெய்து ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும்.

வியாபாரத்திற்கு என தனியாக பொருட்களை கொண்டு வரவும், பணியாளர்கள் பயன்படுத்தி கொள்வதற் காகவும் நான்கு சக்கர வாகனங்களை நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்து சான்று பெறவேண்டும்.

– முனைவர். ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here