இ-வே பட்டியல்: பிழையைச் சரிசெய்யும் ஜிஎஸ்டி ஹீரோ

ஜிஎஸ்டியில் புதியதாக மின்வழி பட்டியல்(E-Way Bill) அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ரூ. 50,000/- திற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும்போது, கொண்டு செல்வோர் கண்டிப்பாக அதற்கான மின் வழி பட்டியலையும் உடன் கொண்டு செல்ல வேண்டும்.

2018-19 நிதியாண்டில் ரூ. 55.78 கோடி மதிப்பிற்கான மின்வழி பட்டியல்கள் இல்லாமல் தவறாக உருவாக்கப்பட்ட பட்டியலைக் கொண்டு சென்ற 2.75 கோடி வாகனங்களுக்கு ரூ. 10,000 அபராத தொகை யுடன் தண்டிக்கப்பட்டன. இந்த மின்வழி பட்டியல் வரிசை எண், கொண்டு செல்கின்ற வாகனத்தின் அடையாள எண், பொருளின் பெயர், விலை போன்ற பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து உருவாக்கப் படுகின்றது.

Also read: ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அந்த பொருளை கொண்டு செல்ல தவறினால், அந்தப் பொருள்களுக்கான மின்வழி பட்டியல் காலக்கெடு தவறிய மின்வழி பட்டியலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. மேலும், இவை மின்வழி பட்டியலிற்கான JSON ஃபைல்களை கையாள தவறுகின்றன. அதுமட்டும் அல்லாது, இந்த மின்வழி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் GSTR 1 அறிக்கையுடன் ஒப்பிடப்படுவது இல்லை. எனவே, மின்வழி பட்டியலை உருவாக்கும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. அதனால், வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப் படுகின்றன. இவைகளை தீர்க்க, குறைந்த செலவில் GST Hero எனும் புதிய பயன்பாடு கைகொடுக்க தயாராக இருக்கின்றது.

இது, நிறுவனங்களுக்கு மின்வழி பட்டியலை உருவாக்க உதவுகின்றது. இது ERP உடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு E-way bill உருவாக்குகின்றது. ஒவ்வொரு முறையும் E-way bill உருவாக்கும் இணைய தளத்திற்கு சென்று பட்டியலை தயார்செய்வதற்கு பதில் இந்த GSTHero ஆனது E-way bill உருவாக்கும் இணையதளத்தை ஒருங்கிணைத்து புதிய மின்வழி பட்டியலை உருவாக்குகின்றது. பின், அதில் மின்வழி பட்டியலின் எண்ணை மாற்றி அடுத்த பட்டியலை அடுத்தப் பட்டியலைத் தயார் செய்யலாம்.

Also read: ஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)

மேலும், மின்வழி பட்டியல்களை மொத்தமாக(Bulk) உருவாக்கவும் உதவு கின்றது. சில மின்வழி பட்டியல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முடிவடைந்து விடுகின்றன. அவற்றைப் புதுப்பிக்கவும் இது உதவுகின்றது. அதை குறுஞ்செய்தியாக நினைவூட்டுகின்றது. மின்வழிபட்டியல் உருவாக்கும்போது ஏற்படும் பிழையையும் சரிசெய்கின்றது. போலியான விற்பனைப் பட்டியல் உருவாக்கப்பட்டால் அதையும் சுட்டிகாட்டு கின்றது. மின்வழிபட்டியலை கையாளும் போது ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க இந்த GSTHero உதவுகின்றது.

– ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here