ஜிஎஸ்டி: பழைய டயருக்கும் 28% ஜிஎஸ்டி

கேள்வி: எனது தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை நிறுவனத்திற்கு சம்பளம் அளித்தல் மற்றும் சில சேவைகள் செய்கிறேன். இதற்கு ஜிஎஸ்டி உண்டா?

பதில்: இவை தொழிலாளர்-தொழிலாளி உறவில் வராது என்றும் இதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும்Advance Ruling வந்து உள்ளது.

கேள்வி: அண்மைய வரி சதவீதத்தில் அநேக பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதில் ஏற்கனவே நிர்ணயம் செய்து இருந்த அதிக பட்ச விலையை குறைக்க வேண்டுமா?

பதில்: ஆம். இல்லை என்றால் சிஜிஎஸ்டி Section 171 படி அபராதம் விதிக்க வகை உண்டு. .

கேள்வி: என்னிடம் பழைய டயர் கொடுத்து என்னிடம் இருந்த ரீட்ரெடிங் செய்த பழைய டயரை விற்பனை செய்கிறேன். இதற்கு என்ன ஜிஎஸ்டி வரி ?

பதில்: பழைய டயராக இருந்தாலும் 28 சதவீதம்தான்..

கேள்வி: நான் மும்பையில் உள்ள ஒரு உற்பத்தியாளருக்கு ஏஜென்டாக இருந்து வரியுள்ள பொருளை விற்பனை செய்கிறேன். ஆண்டுக்கு 15 லட்சம். ஜிஎஸ்டி யில் பதிவு பெற வேண்டுமா?

பதில்: ஆம், கட்டாய பதிவின் கீழ் அந்த வகை ஏஜென்ட் ஜிஎஸ்டி யில் பதிவு செய்ய வேண்டும்..

கேள்வி:Multi modal போக்குவரத்து க்கு ஜிஎஸ்டி யில் என்ன சதவீதம்?
பதில்: சரக்கு இரண்டு வித போக்குவரத்தில் (உ ம் ரயில் மற்றும் லாரி) வந்தால் 12% வரி உண்டு. உள்ளீட்டு வரி எடுத்து கொள்ளலாம்.

கேள்வி: நான் 100%EOUற்கு சப்ளை செய்கிறேன். இதைzero rated sale ஆக எடுத்து கொள்ளலாமா ?

பதில்:SEZற்கு சப்ளை செய்தால் மட்டுமே zero rated saleஆக கருதப்படும். 100% EOUற்கு அது பொருந்தாது

கேள்வி: Job workல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரக்கு அல்லது மூலதன சரக்கு திரும்பி வராவிட்டால் மேலும் நீட்டிக்க வழி உண்டா?

பதில்: உண்டு. ஜிஎஸ்டி ஆணையர் மேலும் ஒரு ஆண்டு சரக்கிற்கும் இரண்டு ஆண்டு மூலதன சரக்கிற்கும் நீட்டிக்க அதிகாரம் உண்டு.

கேள்வி:Nil rated supply வெளி மாநிலத்திற்கு செய்தால் ஜிஎஸ்டி யில் பதிவு அவசியமா?.

பதில்: சிஜிஎஸ்டி Section 23ன் படி முழுவதும் விலக்கு அளித்த பொருள்களை விற்பனை செய்தால் ஜிஎஸ்டி யில் பதிவு அவசியமில்லை. .

கேள்வி:RCMசெலவுகளை கணக்கு பதிவேட்டில் எவ்வாறுaccount செய்து உள்ளீட்டு வரி எடுப்பது ?

பதில் : Self-Invoice முறையில் கணக்கு பதிவேட்டில் account செய்து உள்ளீட்டு வரி எடுக்க வேண்டும் .

கேள்வி: Internship ட்ரைனிகளுக்கு stipend கொடுத்தால்RCMல் ஜிஎஸ்டி கட்ட வேண்டி வருமா?

பதில்: இவை தொழிலாளர்-தொழிலாளி உறவில் வருவதால் RCM வராது

ரெங்கராஜ், வழக்கறிஞர், கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here